விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள்
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஹாங்காங் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பொதுமக்கள் பயனடையும் வகையில் 2 ஆக்சிசன் செறிவூட்டும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதனை மக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி, ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாளமாமுனிகள் சந்நிதியில் நடந்தது. இதனை சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் ஆசீர்வதித்து, மாநில துறவியர் பேரவை அமைப்பாளர் சரவண கார்த்திக்கிடம் வழங்கினார். பாரதிய ஜனதா மாவட்ட செயலாளர் சரவணதுரைராஜா, விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட பொருளாளர் ஆனந்த், ராஜபாளையம் நகர செயலாளர் இசக்கிராஜ், ஒன்றிய அமைப்பாளர் பாலமுருகன் பங்கேற்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் ஆக்சிசன் தேவைப்படுபவர்களுக்கு இந்த கருவியை மருத்துவரின் ஆலோசனைப்படி இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
உதவி வேண்டுவோர் தொடர்பு கொள்ள: ஆனந்த் 9952195502, இசக்கிராஜ் 909291878, பாலு 9787111774, வாசு 9790653631