கொரோனா நோயாளிகள் 500 பேருக்கு உணவு: பள்ளிவாசல் சேவை
ADDED :1594 days ago
மங்கலத்தில் உள்ள, ஜாக் பள்ளிவாசல் சார்பில், அவிநாசி மற்றும் பல்லடம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு, தினமும் மதிய உணவு வழங்கப்படுகிறது. கொரோனா நோயாளிகள், உடனிருப்போர் மற்றும் ரோட்டில் ஆதரவற்ற நிலையில் சுற்றி வருவோர் என, தினமும் 500 பேருக்கு, தொற்று காலத்தில் பசி போக்கும் சேவை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான உணவு மங்கலத்தில், பள்ளிவாசலில் சமைக்கப்பட்டு, வாகனம் மூலம் வழங்கி வருகின்றனர்.