குல்மார்க் சிவன் கோவில் திறப்பு: பக்தர்கள் தரிசனம்
ADDED :1698 days ago
ஜம்மு : ஜம்மு – காஷ்மீரின் குல்மார்க் என்ற இடத்தில் உள்ள சிவன் கோவில் 1915ல் அப்போதைய மகாராணி மோகினி பாய் சிசோடியாவால் கட்டப்பட்டது. சிதிலமடைந்த கோவிலை உள்ளூர் மக்களின் உதவியுடன் ராணுவம் புதுப்பித்தது. மக்கள் பார்வைக்காக நேற்று திறக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.