உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூவேந்தியநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

பூவேந்தியநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

கடலாடி: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மாரியூர் பூவேந்தியநாதர் சமேத பவள நிறவல்லியம்மன் கோயிலில் உள்ள கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

மூலவருக்கு பால், பன்னீர், இளநீர், திரவிய பொடிகள் உள்ளிட்ட 11 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. மூலவருக்கு வெற்றிலை மாலை சாத்தப்பட்டது. பக்தர்கள் யாரும் பூஜையில் பங்கேற்க வில்லை. ஏற்பாடுகளை மாதாந்திர பிரதோஷ அன்னதான கமிட்டியினர் செய்திருந்தனர். உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் உள்ள ஷேத்திர கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மாலையில் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !