உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீமிதி திருவிழா எதிரொலி கொரோனா பரிசோதனை

தீமிதி திருவிழா எதிரொலி கொரோனா பரிசோதனை

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே நடந்த தீமிதி திருவிழாவில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. விக்கிரவாண்டி அடுத்த சிறுவள்ளிக்குப்பம் கிராமத்தில் சில தினங்களாக பெரும்பாலானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


இதுகுறித்து, தாசில்தார் தமிழ்ச்செல்வி, பி.டி.ஓ., முபாரக் அலி பேக் ஆகியோர் விசாரணை செய்ததில், கடந்த வாரம் நடந்த தீமிதி திருவிழாவில் பொதுமக்கள் திரளாக பங்கேற்றது தெரியவந்தது.அதனைத் தொடர்ந்து, விக்கிரவாண்டி வட்டார மருத்துவ அலுவலர் வினோத் தலைமையில் டாக்டர் கார்த்திகேயன், சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணன், ஆய்வாளர் திலீபன் மற்றும் செவிலியர்கள் கொண்ட குழுவினர் கிராமத்தில் முகாமிட்டு 286 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்.துணை பி.டி.ஓ., இமயவரம்பன், வருவாய் ஆய்வாளர் ராஜேஷ், வி.ஏ.ஓ., மகிழ்வாணன், ஊராட்சி செயலாளர் சவீதா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !