உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடற்கரையில் நீராட முடியாதவர்கள் வீட்டிலேயே பூஜை செய்து கொள்ளலாம்

கடற்கரையில் நீராட முடியாதவர்கள் வீட்டிலேயே பூஜை செய்து கொள்ளலாம்

சேதுக்கரை:  திருப்புல்லானி புரோகிதர் சங்க தலைவர் ரெகுபதி கூறியதாவது; முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் உள்ளிட்ட சங்கல்ப பூஜை செய்ய கடற்கரைக்கு செல்ல முடியாதவர்கள் தங்கள் இல்லத்திலேயே செய்து கொள்ளலாம். கொரோனா ஊரடங்கு காரணமாக சேதுக்கரை உள்ளிட்ட புனித ஸ்தலங்களில் உள்ள கடற்கரையில் நீராடுவதற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் முன்னோர்களின் நினைவாக வரக்கூடிய நாளன்று கடற்கரைக்கு செல்ல முடியாதவர்கள் தங்களது முன்னோர்களை நினைத்து சைவ சமையல் தயார் செய்து காக்கைக்கு உணவிட வேண்டும். அன்றைய தினம் முதியோர் இல்லம், ஆதரவற்ற ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது உகந்தது. ஊரடங்கு முடிந்து இயல்பு நிலை திரும்பும் வரை இவ்வாறு செய்து கொள்ளலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !