உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநவமி மகோத்சவ சபா சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

ராமநவமி மகோத்சவ சபா சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

காரைக்குடி: காரைக்குடியில் தமிழிசைச் சங்கம், ராமநவமி மகோத்சவ சபா சார்பில் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

சக்கர நாற்காலிகள், கையுறைகள், முகக்கவசங்கள், பேஷ் ஷீல்டு ஆகிய உபகரணங்களை நன்கொடையாக மாணிக்கவல்லி சிவராமன், சந்திரசேகரன், நாகராஜன், அடைக்கலசாமி, பாக்கியம், சுந்தர், சையது, காளிதாஸ், ராமசாமி, கார்த்தி ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சிக்கு ராமநவமி மகோத்சவ சபா தலைவர் ராம்மோகன் தலைமையேற்றார். தமிழிசைச் சங்க துணைத் தலைவர் பழனியப்பன் ராமநவமி மகோத்சவ சபா செயலாளர் சங்கரய்யர் முன்னிலை வகித்தனர். வருமான வரித்துறை அதிகாரி மகேஸ்வரி மருத்துவ உபகரணங்களை மருத்துவர் தர்மரிடம் வழங்கினார். தமிழிசைச் சங்க செயலாளர் சுந்தர் ராமன் இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்ட தலைவர் பகீரத நாச்சியப்பன், செயலர் ஆனந்த கிருஷ்ணன், வித்யாகிரி பள்ளி முதல்வர் சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !