சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை அடைப்பு!
ADDED :4854 days ago
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவிலில், ஆனி மாத பூஜைகளுக்காக, 14ம் தேதி மாலை 5.30 மணிக்கு, நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, தினமும் வழக்கமான பூஜைகளுடன், சிறப்பு பூஜைகளான, படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, சகஸ்ர கலசாபிஷேகம் போன்றவை நடந்து வருகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் சகஸ்ரகலசாபிஷேகத்திற்கு பின், அய்யப்பனுக்கு சந்தன அபிஷேகம் செய்விக்கப்பட்டது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஆனி மாத பூஜைகள் முடிந்து, நாளை இரவு 10 மணிக்கு, ஹரிவராசனம் பாடல் பாடி, நடை அடைக்கப்படும்.