திருச்செந்துார் சஷ்டி மண்டபத்தில் உள்ள 4 பேருக்கு கொரோனா
ADDED :1687 days ago
திருச்செந்துார்: திருச்செந்துார் கோயில் சஷ்டி விரத மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள ஆதரவற்றவர்களில் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. திருச்செந்துார் பகுதியில் சுற்றி திரிந்த ஆதரவற்றவர்கள், யாசகம் பெறுவோர் என 100 பேர் போலீசார் ஏற்பாட்டில் முருகன் கோயில் இடும்பன் கோயில் சஷ்டி மண்டபத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்கவைக்கப்பட்டனர். இவர்களுக்கு கடந்த இரு நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மொத்தம் 98 பேருக்கு கொரோனா பரிசேதனை செய்யப்பட்டது. இதில் 4 பேருக்கு மட்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் திருச்செந்துார்அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.