உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தப்புரத்தில் ஜூன் 29ல் கும்பாபிஷேகம்!

உத்தப்புரத்தில் ஜூன் 29ல் கும்பாபிஷேகம்!

எழுமலை: மதுரை மாவட்டம் உத்தப்புரத்தில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தால் நிறுத்தி வைக்ப்பட்ட கோயிலுக்கு ஜூன் 29ல் கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. உத்தப்புரத்தில் இரு பிரிவினருக்கிடையே அரசமர வழிபாடு, நிழற்குடை அமைத்தல் போன்ற பிரச்னைகளால் பல ஆண்டுகளாக தகராறு இருந்து வந்தது. இதனால் உத்தப்புரம் பஸ் நிறுத்தத்தில் அமைந்துள்ள ஒரு தரப்பினருக்குச் சொந்தமான மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நிறுத்தி வைக்கப்பட்டது. இங்கு 15 தடவைக்கு மேல் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டது. மாவட்ட எஸ்.பி.,யாக இருந்த அஸ்ரா கர்க், ஏ.டி.எஸ்.பி., மயில்வாகனன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முயற்சியால் இருபிரிவினருக்கு இடையே சமாதானம் ஏற்பட்டது. பின்னர் இக்கோயிலில் வழிபட மற்றொரு தரப்பினர் அனுமதிக்கப்பட்டனர். இருபிரிவினர் மீதும் போலீசார் பதிவு செய்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. தற்போது முழுஅமைதி ஏற்பட்ட சூழ்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஜூன்  29ல் நடக்கவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !