உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வள்ளியூரில் தெப்பக்குளம் சுற்றுச்சுவர் இடிந்தது

வள்ளியூரில் தெப்பக்குளம் சுற்றுச்சுவர் இடிந்தது

வள்ளியூர்: வள்ளியூர் முருகன் கோயில் குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. வள்ளியூரில் முருகனின் அறுபடை வீடுகளுக்கு இணையான குகைக்கோயில் உள்ளது. இக்கோயில் தென் தமிழகத்தில் உள்ள முருகன் கோயில்களில் பிரசித்தி பெற்ற கோயிலாகும்.  இக்கோயிலில் கும்பாபிஷேக பணிகள் நிறைவு பெற்ற நிலையில் கடந்த ஏப். 25ம் தி கும்பாபிஷேகம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதை அடுத்து கும்பாபிஷேகம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் முருகன் கோயில் தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது, பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !