உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொரோனா நீங்க காளஹஸ்தி கங்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை

கொரோனா நீங்க காளஹஸ்தி கங்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை

சித்தூர்: ஸ்ரீ காளஹஸ்தி அடுத்துள்ள பானங்கல் பகுதி முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று பானைகலில் உள்ள கங்கை அம்மனுக்கு ( கங்கை அம்மன் திருவிழா )கமிட்டி சார்பில் சிறப்பு பூஜைகள் நடத்தினர். மேலும் கங்கை அம்மனுக்கு மஞ்சள் நீரால் அபிஷேகம் செய்து அந்த அபிஷேக நீரை பானைகல் முழுவதுமாக தெளித்தனர். அம்மனின் அருள் பெற்று கொரோனா தொற்றில் இருந்து மக்கள் முழுவதுமாக விடுபட வேண்டும் என்றும் சாதாரண நிலைக்கு மீண்டும் நாட்டில் உள்ள மக்கள் திரும்ப வேண்டும் என்று திருவிழா கமிட்டி தலைவர் புஜ்ஜி ரெட்டி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !