பிருத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை
ADDED :1692 days ago
தேவகோட்டை: வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு பட்டு குருக்கள் நகரில் உள்ள பிருத்தியங்கிரா தேவி கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. கொரோனா தாக்கத்தில் இருந்து மக்கள் நலம் பெற்று வளமுடன் வாழ சிறப்பு அபிஷேகங்களும் சிறப்பு பூஜைகளும் நடந்தன. முன்னதாக அட்சய மகா கணபதிக்கு சிறப்பு பூஜை நடந்தது. கோயில் ஸ்தாபகர் கருப்பு குருக்கள் பூஜைகளை நடத்தினார்.