சதுரகிரியில் அமாவாசை வழிபாடு
ADDED :1623 days ago
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் வைகாசி மாத அமாவாசை வழிபாடு பக்தர்கள் இன்றி நடந்தது.
இதனை முன்னிட்டு இன்று காலை 11 மணி அளவில் சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பல்வேறு அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகளை கோவில் அர்ச்சகர்கள் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக கோயில் மூடப்பட்டுள்ள நிலையில், அர்ச்சகர்கள் மலையில் தங்கி தினசரி பூஜைகளை செய்து வருகின்றனர்.