உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தொற்றிலிருந்தது விடுபட்டு நலமுடன் வாழ ஹோம பூஜை

தொற்றிலிருந்தது விடுபட்டு நலமுடன் வாழ ஹோம பூஜை

வெள்ளகோவில்: வெள்ளகோவில் தர்ம சாஸ்தா ஐயப்பசுவாமி கோவிலில் அமாவாசையை முன்னிட்டு மக்கள் அனைவரும் கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டு நலமுடன் வாழ வேண்டி சிறப்பு ஹோம வழிபாடு நடந்தது.விஷேச தன்வந்திரி ஹோமம், மகாலட்சுமி சுதர்சன ஹோமம், சாஸ்தா ஹோமம் பூர்ணாகுதி , கலாசாபிஷேகம் செய்து சுவாமி அலங்காரம் செய்து மஹா தீபாராதனை நடந்தது. தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சிறப்பு ஹோம பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஐயப்பா பூஜா சங்கத்தினர் மற்றும் சேவா சங்கத்தினர் மற்றும் சிறப்பாக செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !