அமாவாசை : ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்தம் வெறிச்
ADDED :1627 days ago
ராமேஸ்வரம்: வைகாசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடலில் நீராட பக்தர்கள் இன்றி வெறிச்சோடி கிடந்தது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஒவ்வொரு மாத அமாவாசையிலும் முன்னோர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டி ஏராளமான பக்தர்கள் புனித நீராடி தரிசிப்பார்கள். ஊரடங்கினால் இன்று வைகாசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு பக்தர்கள் வர போக்குவரத்து வசதி இல்லாததால், அக்னி தீர்த்த கடலில் நீராட பக்தர்கள் இன்றி வெறிச்சோடி கிடந்தது.