உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாய்பாபா கோவில் சார்பில் உணவு பொட்டலங்கள் வினியோகம்

சாய்பாபா கோவில் சார்பில் உணவு பொட்டலங்கள் வினியோகம்

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கன் பாளையத்தில் உள்ள ஸ்ரீ தட்ஷிண சீரடி சாய்பாபா சன்ஸ்தான் சார்பில், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் மதியம் மற்றும் இரவு உணவு விநியோகிக்கும் பணி நடந்து வருகிறது.

தற்போது, ஊரடங்கு அமலில் உள்ளதால், பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், ஜோதிபுரம், பிரஸ் காலனி உள்ளிட்ட பகுதிகளில் தொற்று பாதித்து, வீடுகளில், தனிமைப்படுத்தப்பட்ட பலர் உள்ளனர். மேலும், கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகள் இல்லாததால், ஏழை, எளிய மக்கள் உணவின்றி, திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைப்போக்க நாயக்கன் பாளையத்தில் உள்ள ஸ்ரீ தட்ஷிண சிரடி சாய்பாபா சன்ஸ்தான் நிர்வாகம், கோவிட் பாஸிட்டிவ் இருந்து, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்களுக்கு மதிய மற்றும் இரவு உணவு தயாரித்து வழங்கும் பணியை கடந்த, 20 நாட்களாக செய்து வருகிறது.

இது குறித்து, இக்கோவில் நிர்வாகிகள் ராஜு மற்றும் தர்மலிங்கம் ஆகியோர் கூறுகையில்," கடந்த, 20 நாட்களாக பெரியநாயக்கன்பாளையம், கவுண்டம்பாளையம், ராஜு நகர், ஜோதிபுரம், வீரபாண்டி பிரிவு, பிரஸ் காலனி, சாந்தி மேடு, நரசிம்மநாயக்கன்பாளையம், துடியலூர், வெள்ளக்கிணறு என, 200 வீடுகளில் வசிக்கும் சுமார், 500 நபர்களுக்கு உணவு தயார் செய்து, தினசரி, அவரவர் வீடுகளுக்கு சென்று வழங்கி வருகிறோம். மேலும், உணவு தேவைப்படும் நபர்கள், 936 1155 936 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !