உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சரநாராயண பெருமாளுக்கு ஏணி கண்ணன் அலங்காரம்

சரநாராயண பெருமாளுக்கு ஏணி கண்ணன் அலங்காரம்

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று அமாவாசையை முன்னிட்டு வசந்த உற்சவத்தில் பெருமாள், ஏணி கண்ணன் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு காலை 7:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் , ஆராதனைகள் நடந்தது. மாலை 6:00 மணிக்கு வசந்த உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் பெருமாள், ஏணி கண்ணன் அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கொரோனா நோய் தடுப்பு காரணமாக கோவிலில் பக்தர்கள் அனுமதியின்றி வழிபாடுகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !