வேணுகோபால சுவாமி கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :1905 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் அமாவாசையை முன்னிட்டு வேணுகோபால சுவாமி ஊஞ்சல் உற்சவத்தில் அருள்பாலித்தார்.நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் அமாவாசையை முன்னிட்டு கோமாதா பூஜை நடந்தது. சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. பாமா ருக்குமணி சமேதராய் வேணுகோபால சுவாமி சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார் செய்தார். அருள்தரும் ஐயப்பன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. வழக்கமாக மாலையில் நடக்கும் பூஜைகள் பக்தர்கள் வருகையை தவிர்க்க காலையிலேயே நடந்தது. கொரோனா ஊரடங்கால் பக்தர்களின்றி கோவில் ஊழியர்கள் மட்டும் பூஜையில் கலந்து கொண்டனர்.