சித்தானந்த சுவாமி கோவிலில் சந்தனக்காப்பு அலங்கார பூஜை
ADDED :1589 days ago
புதுச்சேரி: கருவடிக்குப்பம் சித்தானந்த சுவாமி கோவிலில், குரு த ட்சிணாமூர்த்தி சுவாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரத்தில் பூஜை நடைபெற்றது. புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்ட கோவில்கள், ஊரடங்கு தளர்வால் கடந்த 8ம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளன. கோவில்களில் பக்தர்கள், சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கருவடிக்குப்பத்தில் உள்ள சித்தானந்த சுவாமி கோவிலில், குரு தட்ச ணாமூர்த்திக்கு நேற்று சந்தனக்காப்பு அலங்காரத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில், சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.