சவுமியநாராயண பெருமாள் கோயிலில் திருக்கோஷ்டியூர் நம்பிகள் அவதார தினம்
ADDED :1639 days ago
திருக்கோஷ்டியூர் : திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோயிலில் திருக்கோஷ்டியூர் நம்பிகள் அவதார நட்சத்திரத்தைமுன்னிட்டு மங்களாசாசனம் நடந்தது.
இக்கோயிலில் அமர்ந்து தான் உலகிற்கு திருமாலின் எட்டெழுந்து மந்திரத்தை அருளியவர் ராமானுஜர். ராமானுஜருக்கு திருமந்திரத்தை உபதேசித்த ஆச்சாரியார் திருக்கோஷ்டியூர் நம்பி. அவரின் அவதார நட்சத்திரம் வைகாசி ரோகிணி. இத்தினத்தை முன்னிட்டு நேற்று பெருமாள் சன்னதி யில் திருக்கோஷ்டியூர் நம்பிகள் எழுந்தருளி மங்களாசாசனம் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்தனர். அதை தொடர்ந்து கோஷ்டியும், சாற்று முறையும் நடந்தது.