உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி காளியம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்

பொள்ளாச்சி காளியம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, தேவநல்லுார் ஸ்ரீதேவி காளியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா கடந்த, 25ம் தேதி மாலை, 3:00 மணிக்கு கோவில்களில் இருந்து தீர்த்தங்கள் கொண்டு வருதல், விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், கணபதி ேஹாமம்; வாஸ்து சாந்தி உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது. கடந்த, 27ம் தேதி விக்னேஸ்வர பூஜை, சிறப்பு ேஹாம பூஜைகள், மூன்று கால பூஜைகள் நடைபெற்றன. நேற்றுமுன்தினம் அதிகாலை, 4:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, காலை, 6:30 மணிக்கு மஹா கணபதி விநாயகருக்கு மஹா கும்பாபி ேஷகம், காலை, 7:15 மணிக்கு கருப்பராய சுவாமிக்கு கும்பாபிேஷகம், காலை, 10:00 மணிக்கு ஸ்ரீதேவி காளியம்மன் விமானத்துக்கு மஹாகும்பாபிேஷகம் நடந்தது. காலை, 10:15 மணிக்கு அம்பிகைக்கு கும்பாபிேஷகம் நடந்தது. பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !