உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை கோதண்டராமர் கோயிலில் ஸ்ரீமந் நாராயணீயம் சொற்பொழிவு

கோவை கோதண்டராமர் கோயிலில் ஸ்ரீமந் நாராயணீயம் சொற்பொழிவு

கோவை: ராம்நகர் ஸ்ரீ கோதண்டராமர் தேவஸ்தானத்தில் ஸ்ரீமந் நாராயணீயம் ஆன்மிக சொற்பொழிவு நேற்று மாலை துவங்கியது.


‘குருவாயூரப்பனும், நாராயணபட்டத்ரியும்’ என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவாளர் தாமல் ராமகிருஷ்ணன் சொற் பொழிவு நிகழ்த்தியதாவது: ‘நலம் தரும் நாராயணீயம்’ என்பது குருவாயூரப்பன் மீது நாராயண பட்டத்திரியாரால் பாடப்பட்ட பக்தி இலக்கியம். இதை கேட்பதால் மன அமைதியும், ஆரோக்கியமும் பகவான் மீது நம்பிக்கையும் ஏற்படும். பக்தியோடு சொற்பொழிவை கவனித்தால் நம்மோடு குருவாயூரப்பனும் இருப்பதை உணரமுடியும். செம்பை வைத்தியநாத பாகவதருக்கு பாட முடியாமல் தொண்டையில் ஏற்பட்ட பிரச்னை, குருவாயூரப்பனை வேண்டியதால் விலகியது. அதற்காக அவரது கச்சேரியின் நிறைவில் நாராயணீயம் பாடியே நிறைவு செய்தார். இவ்வாறு, அவர் சொற்பொழிவாற்றினார். இன்று மாலை 6 மணிக்கு அஜாமிள சரித்திரம் நரசிம்ம அவதாரம் குறித்து சொற்பொழிவு நடக்கிறது. தொடர்ந்து 5ம் தேதி வரை சொற்பொழிவு நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !