ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் ஜூலை 3, 4ல் 154ம் ஆண்டு விழா
ADDED :31 minutes ago
சிவாஜி நகர்: திம்மையா சாலை காசி விஸ்வநாதேஸ்வர் கோவிலில், 154ம் ஆண்டு விழா, ஜூலை 3, 4ல் கொண்டாடப்படுகிறது.
பெங்களூரு, சிவாஜி நகர் திம்மையா சாலையில் ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது. இக்கோவிலில் 154ம் ஆண்டு விழா, ஜூலை 3, 4ல் கொண்டாடப்படுகிறது. முதல் நாளான ஜூலை 3ல், அதிகாலை 5:00 மணிக்கு கோ பூஜை, 6:00 மணிக்கு கலச ஸ்தாபனை, ஹோமம், பூர்ணாஹூதி, பிரசாதம் வழங்கப்படுகிறது. இரண்டாம் நாளான 4ல் காலை 8:00 மணிக்கு கலச பூஜை, ஹோமம், 10:30 மணிக்கு பூர்ணாஹூதி, கலச அபிஷேகம், அலங்காரம், தங்க நாணய அபிஷேகம், மஹா மங்களாரத்தி காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. இவ்விழாவில், பக்தர்கள் பங்கேற்கும்படி கோவில் தரப்பினர் கேட்டு கொண்டுள்ளனர்.