உலகளந்த பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் ஏற்பாடுகள் எஸ்.பி., நேரில் ஆய்வு
ADDED :6 minutes ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் கும்பாபிஷேக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கள்ளக்குறிச்சி எஸ்.பி., நேரில் ஆய்வு செய்தார். திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வரும் 5ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பாதுகாப்பு உள்ளிட்ட முன்னேற்பாடுகளை கோவில் நிர்வாகத்துடன் இணைந்து காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று கள்ளக்குறிச்சி எஸ்.பி., ஷஹ்னாஸ் நேரில் ஆய்வு செய்தார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கோவில் நிர்வாகத்துடன் கலந்தாலோசித்தார். ஆய்வின்போது டி.எஸ்.பி., மனோஜ் குமார், இன்ஸ்பெக்டர் அன்பழகன் உடன் இருந்தனர்.