உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்று திருவோண விரதம்; மகாவிஷ்ணுவை வழிபட வறுமை நீங்கி சுபிட்சம் பெருகும்!

இன்று திருவோண விரதம்; மகாவிஷ்ணுவை வழிபட வறுமை நீங்கி சுபிட்சம் பெருகும்!

திருவோண விரதம் என்பது மகாவிஷ்ணுவை வழிபட சிறந்த தினமாகும். மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரம் நிகழ்ந்தது இந்த நட்சத்திரத்தில் தான். திருப்பதி வெங்கடாசலபதியின் அவதார நட்சத்திரமும் திருவோணம் ஆகும். திருவோண நட்சத்திரத்தில் பெருமாளுக்கு விரதமிருந்து வழிபட சந்திர தோஷம் நீங்கும். பெருமாள் மந்திரம், விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது நல்ல பலன் தரும். பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபட நிம்மதியான வாழ்வு அமையும். கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே விளக்கேற்றி வழிபடலாம். மாதந்தோறும் திருவோண நட்சத்திர நாளில், விரதம் மேற்கொண்டு பெருமாளை ஸேவித்து வந்தால், ஏழு பிறவியிலும் பதினாறு வகையான செல்வங்களைப் பெற்று, நிம்மதியாக வாழலாம் என்பது நம்பிக்கை. வீட்டில் பெருமாள் அல்லது கிருஷ்ணர் படத்திற்கு செம்பருத்தி, தாமரை மற்றும் துளசி சாற்றி வழிபடுதல் சிறப்பு. இன்று பெருமாளை வழிபட தடைகள் விலகி, எண்ணிய காரியங்கள் கைகூடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !