தீர்த்தாண்டதானத்தில் பக்தர்கள் புனித நீராடல்
ADDED :1593 days ago
எஸ்.பி.பட்டினம் : எஸ்.பி.பட்டினம் அருகே தீர்த்தாண்டதானத்தில் சகலதீர்த்தமுடையவர் கோயில் உள்ளது. ராமர் பூஜித்த இக்கோயிலில், அமாவாசை தினத்தில் பக்தர்கள் கடலில் புனித நீராடுவர். நேற்று வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு கடலில் நீராடிய பக்தர்கள்முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். கொரோனா ஊரடங்கால் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.