உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு

கோவில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு

குமாரபாளையம்: வைகாசி அமாவாசை நாளையொட்டி, குமாரபாளையத்தில், அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. வைகாசி அமாவாசை நாளையொட்டி, குமாரபாளையத்தில் காளியம்மன், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்தரராஜ பெருமாள், குமாரபாளையம் அக்ரஹாரம் காசி விசாலாட்சி உடனமர் காசி விஸ்வேஸ்வரர், கோட்டைமேடு பத்ர காளியம்மன், கைலாசநாதர், லட்சுமி நாராயண சுவாமி, விட்டலபுரி பாண்டுரங்கர், ராமர், தட்டான் குட்டை ஸ்ரீதேவி, பூதேவி சமேத புருஷோத்தம பெருமாள், கோட்டைமேடு ஸ்ரீதேவி, பூதேவி சமேத தாமோதரசுவாமி, கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் உள்ளிட்ட பல கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !