உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 159 கோவில்களின் சொத்து இணையத்தில் பதிவேற்றம்

159 கோவில்களின் சொத்து இணையத்தில் பதிவேற்றம்

சேலம்: தமிழகத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் நிலங்கள், அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, சேலம் மாவட்ட கோவில் சொத்துகளின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதுகுறித்து, சேலம் மாவட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாவட்டத்தில், 1,325 கோவில்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. 781 கோவில் நிலங்களின் ஆவணங்களை ஆய்வு செய்ததில் சரியாக உள்ளது. சுகவனேஸ்வரர் உள்பட, 159 கோவில்களின் சொத்துகள், ஹிந்து சமய அறநிலையத்துறை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு, 1,671 சொத்து இனங்கள் உள்ளன. மீதி கோவில்களின் சொத்து இனங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !