ஹஜ் பயணத்திற்கான விண்ணப்பங்கள் ரத்து
ADDED :1634 days ago
புதுடில்லி : நம் நாட்டில் இருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்வதற்கான விண்ணப்பங்கள் வினியோகம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக ஹஜ் கமிட்டி அறிவித்து உள்ளது.
உலகம் முழுதும் உள்ள முஸ்லிம்கள், வாழ்வில் ஒருமுறையேனும் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள விரும்புவர். இதற்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் சவுதி அரேபியா செல்வது வழக்கம். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக, இந்த ஆண்டு பிற நாடுகளின் ஹஜ் பயணியருக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக, சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அறிவித்து உள்ளது.கொரோனா பாதுகாப்பு காரணங்களுக்காக, இரண்டாம் ஆண்டாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.இதையடுத்து, நம் நாட்டில் இருந்து நடப்பாண்டில் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவோருக்கு விண்ணப்பம் வழங்கும் பணிகள் ரத்து செய்யப்படுவதாக, மத்திய அரசு அறிவித்து உள்ளது.