உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சொர்ணாகர்ஷண பைரவர் கோவிலில் மண்டலாபிஷேகம்

சொர்ணாகர்ஷண பைரவர் கோவிலில் மண்டலாபிஷேகம்

 பாகூர்: சொர்ணாகர்ஷண பைரவர் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது. தவளக்குப்பம் அண்ணா நகரில் சொர்ணாகர்ஷண பைரவர் மற்றும் அஷ்ட பைரவர்கள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து, மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்று வந்தது. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது.காலை 7.00 மணிக்கு கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை தன பூஜை, 10.00 மணிக்கு கலச பூஜை, மங்கள திரவியங்களால் சுவாமிக்கு அபிஷேகம், 12.00 மணிக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !