உடுப்பி அருகே மீனவர் வலையில் சிக்கிய மூகாம்பிகை சிலை
ADDED :1645 days ago
உடுப்பி: உடுப்பி அருகே உள்ள உத்யாவரா போல்ஜி ஆற்றில் மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அவர்கள் வீசிய வலையில் பழங்கால சிலை சிக்கியது. இதை மீனவர்கள், உச்சலா மகாலட்சுமி கோவில் அர்ச்சகர் ராகவேந்திராவிடம் ஒப்படை த்தனர். இதை பார்த்த அவர், பழங்கால மூகாம்பிகை சிலை என்பதை கண்டறிந்தார். சிலை எந்த சேதமும் இன்றி நல்ல நிலையில் இருந்தது. கோவிலில் புதிய சிலை பிரதிஷ்டை செய்யும் போது, பழைய சிலை ஆற்றில் போடப்படும். அதுபோல இந்த சிலையும் ஆற்றில் வீசப்பட்டிருக்கலாம் என அர்ச்சகர்
கூறினார்.