திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆனி 2ம் திருவிழா
ADDED :1589 days ago
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் ஆனித் திருவிழாவின் 2ம் நாளான்று மாலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. நெல்லையப்பர் கோயில் ஆனி திருவிழா கடந்த 15ம் தேதி துவங்கியது. விழாவின் 2ம் நாளான நேற்று காலை உற்சவர் இருப்பிடத்தில் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. மாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்கார, தீபாராதனை நடந்தது.