உச்சினி மாகாளி அம்மன் கோயில் கொடைவிழா
ADDED :1589 days ago
துாத்துக்குடி: ஆழ்வார்திருநகரி, ஈசான உச்சினி மாகாளிஅம்மன் கோயில் கொடை விழா நடந்தது. ஆழ்வார்திருநகரியில் ஈசான உச்சினி மாகாளி அம்மன் கோயில் கொடைவிழா நடந்தது. விழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு சிறப்பு பூஜை மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. விழாவில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி குறைந்த அளவே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளியை பின் பற்றியும் முகவசம் அணிந்து அம்மனை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை விழாகமிட்டியினர் செய்திருந்தனர்.