கோயில்களில் பக்தர்களை அனுமதிக்க வர்த்தகர்கள் வலியுறுத்தல்
ADDED :1684 days ago
திண்டுக்கல் : ஊரடங்கு தளர்வில் கோயில்களில் வழிபாடு நடத்த பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என, தொழில் வர்த்தக சங்கத்தினர் வலியுத்தியுள்ளனர்.
மாவட்ட தலைவர் கிருபாகரன் எழுதியுள்ள கடிதம்: தற்போதுள்ள ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு அளித்துள்ளது. அதில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் குறிப்பிட்ட அளவில் விதிகளுக்குட்பட்டாவது தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும்.இல்லையேல் குறிப்பிட்ட நேரமாவது தரிசனத்திற்கென ஒதுக்க வேண்டும். மாவட்ட அளவிலாவது பஸ்கள் இயக்க வேண்டும். உணவகங்களில் அமர்ந்து உணவருந்த அனுமதிக்க வேண்டும். செருப்பு கடைகள், சிறிய துணிக் கடைகள், நகைக் கடைகளை நிபந்தனைக்குட்பட்டு திறக்க அனுமதிக்க வேண்டும். ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல், டீசல் விலை குறையும் என அறிவித்ததைப் போல, முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும், என கூறினர்.