இனி இல்லை எதிரி தொல்லை
ADDED :1610 days ago
திருமாலின் வலது கையிலுள்ள சக்கரத்தை ‘சுதர்சனர்’ என அழைப்பர். கும்பகோணம் சக்கர பாணி கோயிலில் இவரே மூலவராக இருக்கிறார். அதர்மத்தை அழித்து தர்மத்தை காப்பவர் இவரே. சுதர்சனம் என்றால் ‘நல்ல காட்சி’ என்பது பொருள். இவரை தரிசிப்பவருக்கு பாவம் நீங்கி புண்ணியம் சேரும். சனிக்கிழமைகளில் துளசிமாலை சாத்தி இவரை வழிபட்டால் எதிரி தொல்லை, கடன் பிரச்னை, கிரக தோஷம் நீங்கும். ஆனி சித்திரை நட்சத்திரத்தன்று (ஜூன்20) சுதர்சன ஜெயந்தி பெருமாள் கோயில்களில் நடக்கும்.