மேலும் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சாயி கோயிலில் செப்பு தேரோட்டம்
1565 days ago
கொழுக்கட்டைகளை சூறைவிட்டு அய்யனாருக்கு வினோத வழிபாடு
1565 days ago
ஆனி மாதம், தசமி திதி, சித்திரை நக்ஷத்திரம் (20.06.21) ஶ்ரீசக்கரத்தாழ்வார் அவதாரத் திருநாள். சுதர்ஸன சக்கரம் என்றால் ஶ்ரீமஹாவிஷ்ணுதான்! தன்னுடைய நான்கு திருக்கரங்களிலும் சங்கு (பாஞ்சசன்யம்), சக்கரம் (சுதர்ஸனம்), கதை (கௌமேதகீ), வாள் (நந்தகம்) ஆகியவற்றையும், தோலில் வில்லையும் (சார்ங்கம்) ஆயுதங்களாகத் தரித்திருப்பவர்!திருமாலின் ஆக்ரோஷ ஸ்வரூபமான ஶ்ரீசுதர்ஸன மூர்த்தியே, திருமாலின் காத்தலுக்கு உறுதுணையாக இருப்பவர்!சக்கரத்தாழ்வார் என்ற திருநாமத்தைத் தவிர, சுதர்ஸனர், சக்கரபாணி, சக்கரராஜன், நேமி, திகிரி, ரதாங்கம் என்றும் இவரை போற்றவர்! பெரியாழ்வார் "வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு" என்று போற்றுகிறார்! திருப்பாவையில் "சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்" என்று திருமாலைப் போற்றி பாடுகிறாள் ஆண்டாள். ஸ்வாமி தேசிகன் இவரை "சக்ர ரூபஸ்ய சக்ரிண" - மஹாவிஷ்ணுவிற்கு இணையானவர்! என்கிறார். "சுதர்ஸனாஷ்டகம்" என்ற ஸ்தோத்ர மாலையும் அருளியுள்ளார். சக்கரத்தாழ்வார் அறுங்கோண சக்கரத்தின் நடுவில் மூன்று நேத்ரங்களுடன், சிரஸில் அக்னி க்ரீடம் தாங்கி, பதினாறு கரங்களில் பதினாறு திவ்யாயுதங்களுடன் சேவை சாதிப்பார். சக்கரத்தாழ்வார் விஷ்ணுவின் அம்சம் என்பதை உணர்த்தும் பொருட்டே, அவரது திருவுருவின் பின்னால் உபதேவதையாக ந்ருஸிம்ஹர் சேவை சாதிக்கிறார். எல்லா சன்னதிகளிலும் ஒரு ஷட்கோண (அறுகோணம்) சக்கரத்தின் மத்தியில் சக்கரத்தாழ்வாரையும், பின்புறம் த்ரிகோண (முக்கோணம்) சக்கரத்தின் மத்தியில் யோகநரசிம்மர் அல்லது ஜ்வாலா நரசிம்மரையும் ஒருசேர சேவிக்கலாம்!ஓம் சுதர்ஸனாய வித்மஹேஜ்வாலா சக்ராய தீமஹிதன்னோ: சக்ர: ப்ரசோதயாத்:ஸ்ரீ ஸுதர்சநமாலா மந்த்ரம்த்யானம்ஓம் ஸ்ரீம் ஹரீம் க்லீம் க்ருஷ்ணாய கோவிந்தாய கோபீ ஐநவல்லபாய பராய பரம புருஷாய பரமாத்மநே பரகர்ம மந்த்ர தந்தர யந்த்ர ஔஷத அஸ்த்ர சஸ்த்ரானி ஸம்ஹர, ஸம்ஹர ம்ருத்யோர் மோசய மோசய ஓம் நமோ பகவதே மஹா ஸுதர்சநாய தீப்த்ரே ஜீவாலா பரீதாய ஸர்வதிக்க்ஷோபணகராய ஹும் பட் பரப்ரஹ்மணே பரம் ஜ்யோதிஷே ஸ்வாஹா ||ஓம் நமோ பகவதே ஸுதர்சநாய ஓம் நமோ பகவதே மஹா ஸுதர்சநாய மஹாசக்ராய மஹா ஜ்வாலாய ஸர்வரோக ப்ரசமநாய கர்ம பந்த விமோசநாய பாதாதி மஸ்த பர்யந்தம் வாத ஜநித ரோகாந் பித்த ஐநித ரோகாந், ச்லேஷ்ம ஜநித ரோகாந் தாது ஸங்கலிகோத்பவ நாநாவிகார ரோகாந் நாசய நாசய ப்ரசமய ப்ரசமய ஆரோக்யம் தேஹி தேஹி ஓம் ஸஹஸ்ராரஹும் பட் ஸ்வாஹா ||
1565 days ago
1565 days ago