நாங்குநேரி : நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.சக்கரத்தாழ்வார் ஜெயந்தி. நாங்குநேரி வானமாமலை பெருமாள் திருக்கோயிலில் ப்ரயோக சுதர்சனர் வீற்றிருக்கிறார். பெருமாளின் திருக்கரத்தில் இருந்து புறப்படத் தயாராக இருக்கும் கோலம் (சக்கரம் திரும்பி இருப்பதை படத்தில் காணலாம்). பக்தர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்ற, பெருமாள் இவரைத் தயாராக வைத்திருக்கிறார். இங்கு இவருக்கு திருமஞ்சனம் செய்வது விசேஷம். இன்று (20ம் தேதி) சக்கரத்தாழ்வார் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.