உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடியில் பூசாரிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

பரமக்குடியில் பூசாரிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

பரமக்குடி: பரமக்குடி பகுதியில் இந்து சமய துறை சார்பில் மாத சம்பளம் இன்றி பணியாற்றும், பூசாரி, அர்ச்சகர்கள் மற்றும் பட்டாச்சாரியார்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை சிவகங்கை மண்டல இணை ஆணையர் தனபால் தலைமை வகித்தார். பரமக்குடி உதவி ஆணையர் சிவலிங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் சிவகாமி முன்னிலை வகித்தனர். அமைச்சர் சேகர்பாபு 198 பேருக்கு ரூ. 4 ஆயிரம், 10 கிலோ அரிசி மற்றும் 15 வகையான மளிகைப் பொருட்களை வழங்கினார். பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன், முன்னாள் அமைச்சர்கள் தங்கவேலன், டாக்டர் சுந்தரராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !