உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்கரத்தாழ்வார் ஜெயந்தி: பொள்ளாச்சி கோவிலில் சிறப்பு வழிபாடு

சக்கரத்தாழ்வார் ஜெயந்தி: பொள்ளாச்சி கோவிலில் சிறப்பு வழிபாடு

பொள்ளாச்சி:  கரிவரதராஜப்பெருமாள் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில், சுதர்சன ஜெயந்தியையொட்டி, சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கவில்லை.

* உடுமலையில், சக்கரத்தாழ்வார் ஜெயந்தியையொட்டி, கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆனி மாதம், தசமி திதியில், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் அவதார திருநாள், சுதர்சன ஜெயந்தி உற்சவமாக கொண்டாடப்படுகிறது.அவ்வகையில், நேற்று, நெல்லுக்கடை வீதி சவுந்திரராஜ பெருமாள் கோவிலில், சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர் சன்னதியில், சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது.உடுமலை சுற்றுப்பகுதிகளிலுள்ள, பெருமாள் கோவில்களில், சக்கரத்தாழ்வார் ஜெயந்திக்காக சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !