தில்லை காளியம்மன் கோவில் உண்டியல் எண்ணும் பணி
ADDED :1611 days ago
சிதம்பரம்: சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவில் நேற்று காணிக்கை உண்டியல் எண்ணப்பட்டது.
சிதம்பரம் தில்லை காளி கோயில் நேற்று பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் காணிக்கை உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது. மாவட்ட உதவி ஆணையர் பரணிதரன் தலைமையில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது. சிதம்பரம் ஆய்வாளர் நரசிங்கப்பெருமாள் தில்லை காளி கோயில் செயல் அலுவலர் ராஜா சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில் பணியாளர்கள் வாசு ராமலிங்கம் மற்றும் பலர் உடன் இருந்தனர். உண்டியல் காணிக்கை மூலம் 10 லட்சத்து 83 ஆயிரத்து 948 ரொக்கம், 40 கிராம் தங்கம், 115 கிராம் வெள்ளி, யுஎஸ் டாலர் 20, தினார் 1 ஆகியன பெறப்பட்ட காணிக்கைகள் மற்றும் உண்டியலில் போடப்பட்ட பக்தர்களின் தங்கநகைகள் சிதம்பரம் கூட்டுறவு வங்கியில் ஒப்படைக்கப்பட்டது.