பழநி கோயிலில் தீத்தடுப்பு ஒத்திகை
ADDED :1669 days ago
பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகம், தீயணைப்புத்துறை இணைந்து நேற்று குடமுழுக்கு மண்டபத்தில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.இதில் கோயில் உதவி ஆணையர் செந்தில்குமார் தலைமையில் கோயில் ஊழியர்கள், தனியார் பாதுகாவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். தீயணைப்புத் துறையினர் உதவியுடன் ஆயில், மின்சாரம், சிலிண்டர் ஆகியவற்றில் தீப்பிடித்தால் எவ்வாறு அணைப்பது என பயிற்சி அளிக்கப்பட்டது. தீயணைப்பான்களை கையாளும் முறை, செய்யக் கூடாதவை எவை என விளக்கப்பட்டது. தீயணைப்பு அலுவலர் ஆண்டவராஜ் உட்பட வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டனர்.