மதுரை மீனாட்சி அம்மன் ஆனி ஊஞ்சல் உற்சவம்: 9ம் நாள்
ADDED :1670 days ago
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆனி ஊஞ்சல் உற்சவம் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் 9ம் நாளான நேற்று நூறுகால் மண்டபத்தில் அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. கோயில் வளாகத்திற்குள் பக்தர்களின்றி விழா நடத்தப்பட்டு வருகிறது.