உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம் சார்பில் நோயாளிகளுக்கு மருந்து பெட்டகம்

ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம் சார்பில் நோயாளிகளுக்கு மருந்து பெட்டகம்

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம் சார்பில், கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

நாடுவது முழுவதும், கடந்த மாதம் வேகமாக பரவிய கோவிட் இரண்டாம் அலை, படிப்படியாக குறைந்து வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டு, குணமடைந்தவர்கள் தொடர்ந்து, உடல் நலத்துடன் இருக்க, பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா மருந்து பெட்டகங்களை இலவசமாக வழங்கி வருகிறது. இதில், 2000 ரூபாய் மதிப்பு பல்ஸ் ஆக்சி மீட்டர், வெப்பமானி, ஆவி பிடிக்கும் உபகரணம், ஆயுஷ் மாத்திரைகள் உள்ளிட்ட, 12 பொருட்கள் உள்ளன. பெட்டகத்தை மத்தம்பாளையத்தில், 12 பேருக்கும், விவேகானந்தபுரத்தில் நான்கு பேருக்கும், சுவாமி பிரம்மக்ஞானந்தா, உதவி பேராசிரியர் தங்கமணி ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து, தகுதியுடைய மற்ற பயனாளிகளுக்கும், படிப்படியாக வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !