சஷ்டி விரதம் குறித்து சொல்லும் பழமொழி
ADDED :1651 days ago
அமாவாசைக்குப் பிறகு வரும் ஆறாம் நாளில் முருகனை வேண்டியிருப்பது சஷ்டி விரதம். குழந்தைப் பேறு வேண்டும் தம்பதியர் இதை கடைபிடிப்பர். இதன் அடிப்படையில் சொல்லப்படும் பழமொழி ‘சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்’ என்பதாகும். சஷ்டி விரதம் இருந்தால் அகப்பையில் {கருப்பையில்} குழந்தை தோன்றும் என்பது இதன் பொருள்.