கல்லிடை கோயிலில் இன்று பக்தர்கள் விபூதி அபிஷேகம்!
ADDED :4905 days ago
அம்பாசமுத்திரம்:கல்லிடைக்குறிச்சி ஷீரடி சாய்பாபா கோயிலில் இன்று (19ம் தேதி) பக்தர்கள் பாபாவிற்கு விபூதி அபிஷேகம் செய்யலாம். கல்லிடைக்குறிச்சியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 19ம் தேதி ஷீரடி சாய்பாபா கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் நடந்து ஓராண்டு முடிவடைவதை முன்னிட்டு இன்று (19ம் தேதி) மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை பாபாவிற்கு சிறப்பு விபூதி அபிஷேகம் நடக்கிறது. இதில் பக்தர்கள் தாங்களே பாபாவிற்கு விபூதி அபிஷேகம் செய்யலாம்.இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.