உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இஸ்கான் அமைப்பு சார்பில் ஜகன்நாதர் ரத யாத்திரை

இஸ்கான் அமைப்பு சார்பில் ஜகன்நாதர் ரத யாத்திரை

சேலம்: சேலம் இஸ்கான் அமைப்பு சார்பில், ஜூன் 21ம் தேதி, ஜகன்நாதரின் ரத யாத்திரை விழா நடக்கிறது. ஒடிஸா மாநிலம், பூரி ஜெகன்நாதரின் ரத யாத்திரையில், உலகம் முழுவதும் இருந்து, 15 முதல் 20 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இஸ்கானின் முயற்சியால் உலகம் முழுவதும் உள்ள பெரிய நகரங்களிலும், இந்த ரத யாத்திரை நடத்தப்பட உள்ளது. சேலம் மாநகரவாசிகளுக்கு மங்களத்தை வேண்டியும், மக்களின் நன்மைக்காகவும், ஜூன் 21ம் தேதி, சேலத்தில் ஜகன்நாதரின் ரத யாத்திரை நடக்கிறது. பிரம்மாண்ட ரதத்தில் ஊர்வலமாக பட்டைக்கோவில் அருகில் இருந்து மாலை 3 மணிக்கு தொடங்கி, சின்னக்கடைவீதி, கலெக்டர் அலுவலகம், நான்கு ரோடு, புது பஸ் ஸ்டாண்ட், ஐந்து ரோடு வழியாக சோனா கல்லூரிக்கு வந்து சேர்கிறது. இதில், பக்தர்கள் குழுவினரால், பிரார்த்தனை பாடல்களும், கீர்த்தனங்களும் நடைபெறுகிறது. வழிநெடுகிலும் இனிப்பு பிரசாதம் வினியோகம் செய்யப்பட உள்ளது. சோனா கலையரங்கத்தில், மாலை 6.30 மணிக்கு மேல் பஜனை, உபன்யாசம், நாடகம் மற்றும் இலவச பிரசாதம் வழங்க, இஸ்கான் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !