உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்!

நாகமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்!

வில்லியனூர்: கரிக்கலாம்பாக்கம் அருகே புதியதாக அமைக் கப்பட்டுள்ள நாகமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கரிக்கலாம்பாக்கம் அருகே உள்ள பெருங்களூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள நாகமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை யாகசõலை பூஜைகள் துவங்கி தொடர்ந்து நடந் தது. நேற்று காலை 9.15 மணியளவில் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் மங்கலம் தொகுதி எம்.எல்.ஏ., தேனீ ஜெயக்குமார், வட் டார காங்., தலைவர் முரளி தரன், கலியபெருமாள், ராஜ்குமார் மற்றும் தனத்துமேடு, பெருங்களூர், கரிக்கலாம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதியைச் @சர்ந்த மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !