உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அக்கா சுவாமி கோவிலில் 142வது குருபூஜை விழா!

அக்கா சுவாமி கோவிலில் 142வது குருபூஜை விழா!

புதுச்சேரி: வைத்திக்குப்பம் அக்கா சுவாமி கோவிலில் 142வது குருபூஜை விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வைத்திக்குப்பத்தில் அக்காசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு மகா அபிஷேகம் மற்றும் அக்கா சுவாமிகளின் 142வது குரு பூஜை விழா வரும் 25ம் தேதி துவங்குகிறது. அன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு கணபதி பூஜை நடக்கிறது. 26ம் தேதி காலை 4 மணிக்கு நடராஜருக்குச் சிறப்பு அபிஷேகமும், 8.45 மணிக்கு குரு அக்கா சுவாமிகளுக்குச் சிறப்பு அபிஷேகமும், பகல் 11.30 மணிக்கு ஆராதனையும், 11.55 தீபாரா தனையும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு சிறப்பு அர்ச்சனையும், 6.30 மணிக்கு சிவகாம சுந்தரி சமேத நடராஜர் மாட வீதியுலாவும் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை அக்கா சுவாமி திருத்தொண்டு சபையினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !