புனித அந்தோணியர் ஆலய தேர் பவனி விழா
ADDED :4905 days ago
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த சுண்டம்பட்டி புதுவை நகர் புனித அந்தோணியர் ஆலய தேர் பவனி விழா நடந்தது. திருவிழாவையொட்டி, கடந்த 12ம் தேதி பங்கு தந்தை திவாகர் தலைமையில் கொடியேற்றம் நடந்தது. 14, 15 மற்றும் 16ம் தேதிகளில் மாலையில் திருப்பலி, சிறப்பு மறையுரை, தியானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று முன்தினம் (ஜூன் 17) இரவு, தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் கூட்டு திருப்பலி நடந்தது. சென்னை தெரசுநாதன் தலைமையில் கூட்டு பாடற் திருப்பலி நடந்தது. இரவு 8.30 மணிக்கு புனிதரின் அலங்கார ஆடம்பரத் தேர்பவனி நடந்தது. கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.